விஜயகாந்த் நல்ல முடிவை அறிவிப்பார்- அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சகோதரர் விஜயகாந்த் இதில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். #Vijayakanth #MinisterJayakumar
விஜயகாந்த் நல்ல முடிவை அறிவிப்பார்- அமைச்சர் ஜெயக்குமார்
Published on

ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று உதவிகள் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சகோதரர் விஜயகாந்த் இதில் நல்ல முடிவை அறிவிப்பார். சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடப்பதால் விரைவில் நல்ல முடிவு ஏற்படும்.

பிரதமர் மோடி 6-ந்தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச வருவதால் அதே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களையும் இடம் பெற செய்ய ஏற்பாடு நடக்கிறது. எனவே அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய உள்ளோம். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் விரைவாக நடந்து வருகிறது.

அ.திமு.க.வுக்கு எதிர்க்கட்சி தி.மு.க.தான். துரோகி கட்சி அ.ம.மு.க., தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி துரோக கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார். #Vijayakanth #MinisterJayakumar

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com