

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.
கூட்டணி விஷயத்தில் அ.தி.மு.க. விரைவு ரெயில் வேகத்தில் செல்கிறது. தி.மு.க. சரக்கு ரெயில் வேகத்தில் செல்கிறது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.