உ.பி.யில் சோகம்- ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.யில் சோகம்- ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Published on

கான்பூர்:

உத்தரபிரதேசத்தில் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் பிரசாத் என்பவரும், அதே கிராமத்தை சேர்ந்த சோனு என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் விரக்தியடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். 

இந்நிலையில் இன்று இருவரும் கரம்பிடித்தவாறு லக்னோவில் இருந்து ஜபல்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com