லண்டன் தாக்குதலில் 7 பேர் பலி: தீவிரவாதிகளுக்கு உதவிய 7 பெண்கள் கைது

லண்டன் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவிய 7 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
லண்டன் தாக்குதலில் 7 பேர் பலி: தீவிரவாதிகளுக்கு உதவிய 7 பெண்கள் கைது
Published on

லண்டன்:

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் வேனை ஏற்றியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினார்கள். அதில் 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

விசாரணையில் அவர்களில் குர்ரம் பட் (23), ரஷீத் ரெடோன் (30) ஆகிய 2 பேர் மட்டும் அடையாளம் தெரிந்தது. இவர்களில் குர்ரம் பட் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன். இங்கிலாந்து குடியுரிமை பெற்றவன். கிழக்கு லண்டனில் பார்க்கிங் பகுதியில் பல ஆண்டுகளாக தங்கியிருந்தான்.

ரெடோனும் பார்கிங் பகுதியில் தங்கியிருந்தான். அவன் மொராகோ - லிபியா பெற்றோருக்கு பிறந்தவன் ஆவான்.

தாக்குதல் தொடர்பாக லண்டன் மெட்ரோ பாலிட்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை 12 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் தீவிரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரவாதிகளுக்கு உதவியாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களுக்கு 27 முதல் 60 வயது இருக்கும். 5 ஆண்கள் 27 முதல் 55 வயதினர் ஆவர்.

மேலும் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா? என்பதை கண்டறிய, கிழக்கு லண்டனில் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com