தேனி மாவட்ட கோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தேனி:

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மூத்த வக்கீல்கள் ஜெயபாரதி, காண்டீபன் மற்றும் வக்கீல்கள் முருகானந்தம், செல்வம், அழகேந்திரன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஐகோர்ட்டு நீதிபதிகளின் வயது வரம்பை உயர்த்த கூடாது. 3 ஆண்டுகளுக்கு உட்பட்ட இளம் வக்கீல்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். வக்கீல்களுக்கான சேமநல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும். கோர்ட்டு கட்டணங்களை குறைக்க வேண்டும். தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில்க்கு மாவட்ட வாரியாக உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com