பரமக்குடி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

மின்கட்டண முறைகேட்டை கண்டித்து பரமக்குடி நீதிமன்றம் முன்பு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட வக்கீல்கள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பரமக்குடி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
பரமக்குடி நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
Published on

நயினார்கோவில்:

மின்கட்டண முறைகேட்டை கண்டித்து தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின்படி பரமக்குடி நீதிமன்றம் முன்பு தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட வக்கீல்கள் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜான்ராஜதுரை, கதிரவன், செந்தில்குமார், வக்கீல்கள் சுவாமி நாராயணன், கேசவன், பூமிநாதன், மலைச்சாமி, செல்லப்பாண்டி, வீரபாண்டி, நாகராஜ், ராம்கில்லட்டின் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த பசுமலை, செல்வம், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத்துக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com