கோவில்பட்டியில் பலத்த மழை

கோவில்பட்டியில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. வழிப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சுரங்க வழிப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.
சுரங்க வழிப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம், பாசிப்பயறு, உளுந்து போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு மழையை எதிர்பார்த்து விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். 

இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4.30 மணியிலிருந்து மழை கொட்டத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. ரோடுகள், தெருக்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

கோவில்பட்டி நகரில் பெரும்பாலான இடங்களில் மழை நீருடன் சாக்கடையும் கலந்து மெயின்ரோடு வழியாக ஓடியது. இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள சுரங்க வழிப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com