சர்ச்சையில் சிக்கிய பிரம்மாண்ட லுலு மால்

கேரளாவில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் லுலு எனும் வணிக வளாகம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
லுலு மால்
லுலு மால்
Published on

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பகுதியில் பிரபல லுலு வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகம் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சலீம் என்பவர் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று லுலு முறையாக கட்டப்பட்டதா? என்பது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், 'லுலு வளாகம் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடிக்கு மேலாக கட்டப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் அனுமதி தந்திருக்க வேண்டும்' என சலீம் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய் மற்றும் ஜெயசங்கரன் நம்பியார் கொண்ட அமர்வு விசாரித்தது.

அதன்படி, 3  லட்சம் சதுர அடிக்கு குறைவாக கட்டிடம் இருந்தால் மாநில சுற்றுச்சூழல் துறையே அனுமதி தரலாம். லுலு கட்டிடம் 2 லட்சத்து 32 ஆயிரம் சதுர அடிக்கு கட்டப்பட்டுள்ளது. எனவே, மாநில சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற்று முறையாகத்தான் கட்டப்பட்டது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள், லுலு வணிக வளாகம் அளித்த விளக்கத்துக்கு பதில் கூற, சலீமுக்கு கால அவகாசம் கொடுத்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com