

சென்னை:
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கும், குமரி கடலுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது.
அப்போது ஒரு சீன கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து தமிழகத்தை நோக்கி வந்தது. இதை தொலைவில் இருந்து இந்திய கடலோர காவல் படையினர் கண்டுபிடித்துவிட்டனர். உடனே அந்த கப்பலுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதன் பிறகு துப்பாக்கியால் சுட்டனர்.
சீன கப்பலில் இருந்தவர்ளும் திருப்பி சுட்டனர். கடுமையான துப்பாக்கி சண்டைக்குப் பின்னர் சீன கப்பல் விரட்டியடிக்கப்பட்டது. இதுபற்றி கடலோர காவல் படை எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
அதிகாரிகள் தரப்பில் கூறும் போது சீன கப்பல் விரட்டியடிக்கப்பட்ட தகவல் தங்களுக்கு கிடைத்து இருப்பதாக தெரிவித்தனர். என்ன காரணத்துக்காக சீன கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவியது என்பது தெரியவில்லை என கூறினார்.
இதுவரை காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையில் தான் தீவிரவாதிகள் ஊடுருவல், அத்து மீறி தாக்குதல் போன்றவை நடந்தது. தற்போது கடல் வழியாக சீன கப்பல் ஊடுருவ முயன்றது. பாதுகாப்பு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.