

இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:-
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்தை நெருங்கி உள்ளது. கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54.27 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.56 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 83.84 சதவீதமாகவும் உள்ளது.
நிரவ் மோடி மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரி மீது குற்றப்பத்திரிகை
நிரவ் மோடி மோசடிக்கு உதவிய வங்கி அதிகாரி கோகுல்நாத் ஷெட்டி மீதும், ஆஷா லதா மீதும் மும்பையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ராகுல் காந்தி மீதான போலீஸ் தாக்குதலுக்கு யாரும் ஆதரவு தரமாட்டார்கள்: சஞ்சய் ராவத்
உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி மீதான போலீஸ் தாக்குதலை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு- மீனவர்கள் பீதி
கன்னியாகுமரியில் 50 அடி தூரத்துக்கு நேற்று இரவு திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் பீதி அடைந்தனர்.
வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்- தங்க தமிழ்செல்வன்
வருகிற தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு வர தன்னார்வலர்களுக்கு அழைப்பு- நோய் தடுப்புத்துறை இயக்குனர் தகவல்
18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் பரிசோதனைக்கு முன்வரலாம் என்று நோய் தடுப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அறிவுத்திறன் போட்டியில் தமிழ் புறக்கணிப்பு- ராமதாஸ் கண்டனம்
காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் பள்ளி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட அறிவுத்திறன் புதிர்ப்போட்டிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தான பக்தி சேனலுக்கு ரூ.1 கோடி நன்கொடை- சென்னை தம்பதியர் வழங்கினர்
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்.வி.பி.சி. பக்தி சேனலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர்களான காமாட்சி-சங்கர் தம்பதியர் ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம்
கொரோனா வைரசுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருந்தாலும் சுவை மற்றும் வாசனை அறியும் தன்மையை இழப்பதுதான் நம்பகமான அறிகுறி என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு ரூ.660 கோடிக்கு விமான உதிரி பாகங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
சி130 ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 75 லட்சம் பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்தை கடந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் இதுவரை 75 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 10.33 லட்சம் மக்கள் இந்த கொடியை வைரசுக்கு பலியாகி உள்ளனர். 2.58 கோடி பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மீண்டும் அதே தவறுகளை செய்கிறோம்- தோல்வி குறித்து டோனி வேதனை
ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி வேதனை தெரிவித்துள்ளார். கேட்ச்களை தவறு விடுவது, நோ-பால் வீசுவது போன்ற தவறுகளை மீண்டும் செய்வதாகவும், இதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் டோனி கூறினார்.
20 ஓவர் கிரிக்கெட்டில் மூன்று மாற்றங்கள் தேவை - வார்னே யோசனை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, 20 ஓவர் கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்கு மூன்று யோசனைகளை முன் வைத்துள்ளார்.
சில்க் ஸ்மிதாவை தேடும் அவள் அப்படித்தான் படக்குழு
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து "அவள் அப்படித்தான்" என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதற்காக சில்க் ஸ்மிதாவைப் போன்ற அழகான பெண்ணை படக்குழுவினர் தேடிவருகின்றனர்.