கணவர் இறந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை

கணவர் இறந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவர் இறந்த விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை
Published on: 

மதுரை:

மதுரை மேலூர் அருகேயுள்ள வாச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ரேகா (வயது 26). இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ராஜேஷ் குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6-ந் தேதி இறந்து விட்டார். இதனால் வேதனை அடைந்த ரேகா கடந்த சில நாட்களாக யாருடனும் பேசவில்லை.

மிகவும் மனவேதனையில் இருந்த அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தீக்குளித்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் ரேகா மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இருப்பினும் ரேகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக ரேகாவின் தாயார் வெள்ளையம்மாள் கீழவளவு போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com