ஊத்தங்கரையில் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி

ஊத்தங்கரையில் சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்தங்கரையில் சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி
Published on

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுஜாதா. இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மாதாந்திர சீட்டு மற்றும் மகளிர் குழுக்களுக்கு வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சுஜாதாவிடம் பணம் கேட்டுள்ளனர் பணம் தருவதாக கூறி காலம் கடத்திவந்த சுஜாதா குடும்பத்துடன் கடந்த வாரம் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். 

வீட்டிற்க்கு சென்று பார்த்த பெண்கள் இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது புகார் வாங்க மறுத்ததால் பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்து உள்ளனர். புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவந்ததால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்டோர் ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து சுஜாதாவை கைது செய்ய கோரியும் பணத்தை மீட்டு தரகோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து நிகழ் விடத்திற்க்கு வந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி அர்சுனன், காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தலைமறைவாக உள்ள சுஜாதாவை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருவதாக உறுதி கூறியதின்பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். #tamilnews

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com