கொடைக்கானல் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்ணாவிரத போராட்டம்

கொடைக்கானலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கிறிஸ்தவ ஆலய நுழைவு வாயிலில் அமர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானலில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய பங்கு தந்தையாக எட்வின் சகாய ராஜ் என்பவர் உள்ளார். இவரது நடவடிக்கைகள் அங்குள்ள கிறிஸ்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து எட்வின் சகாய ராஜை மாற்றக்கோரி ஆலயம் முன்பாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் ஆலய நுழைவு வாயிலில் அமர்ந்து உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.

ஆலயம் முன்பாகவே ஜெப வழிபாடு நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com