திண்டுக்கல் அருகே நோய் கொடுமையால் தீக்குளித்து பெண் தற்கொலை

திண்டுக்கல் அருகே நோய் கொடுமையால் தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் அருகே நோய் கொடுமையால் தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள காட்டுபட்டியைச் சேர்ந்த கண்ணையா மனைவி காவேரியம்மாள் (வயது 65). இவருக்கு கேன்சர் நோய் இருந்து வந்தது. கழுத்தில் கட்டியுடன் அவதிப்பட்டு வந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று கருவேலங்குளம் பகுதியில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். பலத்த தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.

இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com