கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நாகையில் மழை (கோப்பு படம்)
நாகையில் மழை (கோப்பு படம்)
Published on

நாகை:

வெப்ப சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீடித்தது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் அறிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com