மகள் பயிலும் கல்லூரியில் ஜூனியராக இருக்கும் தந்தை -நெகிழ்ச்சி பதிவு

மும்பையில் மகள் பயிலும் அதே கல்லூரியில் அவருக்கு ஜூனியராக தந்தை பயின்று வருகிறார். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.
மகளுடன் சட்ட கல்லூரியில் தந்தை
மகளுடன் சட்ட கல்லூரியில் தந்தை
Published on

சமூக வலைத்தளங்களில் புகழ்ப்பெற்ற பக்கங்களுள் 'ஹியூமன்ஸ் ஆப் பாம்பே' எனும் பக்கமும் ஒன்று. இப்பக்கத்தில் சாமானியர்கள் முதல் சாதித்தவர்கள் வரை அனைவரின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை பதிவாக வெளியிடுவது வழக்கம்.

இந்த பக்கத்தில் இன்று அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டது. இதில் கல்லூரிப்பெண் ஒருவரின் அந்தப்பதிவு அனைவராலும் ரசிக்கப்படும் வகையில் உள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

என் தந்தைக்கு சட்டம் குறித்தும், வழக்குகள், அவற்றின் விவரங்கள் குறித்தும் அறிய மிகுந்த ஆர்வம் உள்ளது. அவருக்கு கோர்ட் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை. ஆனால், குடும்ப சூழல் காரணமாக அது நடக்கவில்லை.

எனது வகுப்புகள் குறித்து தினமும் விசாரிப்பார். எனக்கு அப்போதுதான் தோன்றியது. இது அவர் கனவை நனைவாக்கும் நேரம் என்பது. நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

இப்போது நானும், என் தந்தையும் ஒரே கல்லூரியில்தான் படிக்கிறோம். நிறைய மகிழ்ச்சியான தருணங்கள் கல்லூரியில் நடந்துள்ளன. அவரது ஆர்வத்தின்படி வகுப்புகளில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com