வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் - அரியானா தேர்தலில் இந்திய தேசிய லோக்தளம் வாக்குறுதி

அரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இந்திய தேசிய லோக்தளம்
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இந்திய தேசிய லோக்தளம்
Published on

சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், அரியானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

அதில், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com