ஏரியூர் அருகே மாணவியை கிண்டல் செய்த வாலிபர் கைது

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கிண்டல் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஏரியூர் அருகே மாணவியை கிண்டல் செய்த வாலிபர் கைது
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ளது மலையானூர். இந்த ஊரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் அதே ஊரை சேர்ந்த தமிழ்செல்வன் (20), தமிழரசன் (23), பச்சையண்ணன் (28), சிவமணி(26) ஆகிய 4 பேரும் கேலி-கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்று மாணவி மீது மோதுவது போல் செல்வதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் தொடர்ந்து நீடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com