தஞ்சை அருகே காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

தஞ்சை அருகே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

வல்லம்:

தஞ்சையை அடுத்த தங்கப்ப உடையப்பன் கிராமத்தில் உள்ள காட்டுபகுதியில் சாராயம் காய்ச்சுவதாக, வல்லம் உட்கோட்ட குற்ற பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில், வல்லம் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை போலீசார் தங்கப்ப உடையான் பட்டி கிராம எல்லையில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் நாயக்கர் பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன்( வயது 25), மாரிமுத்து (28) ஆகிய 2 பேரும் காட்டுப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 600 லிட்டர் கள்ளச் சாராய ஊறலை அழித்தனர். மேலும் 10 லிட்டர் காய்ச்சிய கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com