திருவண்ணாமலையில் மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் தற்கொலை மிரட்டல்

விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலையில் மின்கோபுரத்தில் ஏறி விவசாயிகள் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.
Published on

திருவண்ணாமலை, ஜூன்.18-

வேலூர் மாவட்டம் திருவலத்தில் இருந்து அரியலூர் வரை விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தற்போது கோபுரங்கள் அமைக்கப் பட்டு மின் கம்பிகள் பொருத்தும் பணி நடக்கிறது. திருவண்ணா மலை அருகே உள்ள கிளிப்பட்டு கிராமத்தில் உள்ள உயர்மின் கோபுரங் களில் மின் கம்பிகள் பொருத்தும் பணிக்கு பணியாளர்கள் இன்று காலை வந்தனர்.

இதையறிந்த கிராமமக்கள் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களை முற்றுகையிட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சகோதரர்கள் பன்னீர், ஏழுமலை ஆகியோர் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.

திருவண்ணாமலை டி.எஸ்.பி. அண்ணாதுரை மற்றும் போலீசர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் பணி நடக்கிறது.

இதுவரை இழப்பீடும் வழங்கவில்லை. மின்கோபுரம் இடத்தின் உரிமையாளர்களுக்கு ஆண்டுதோறும் வாடகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. * * * மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயிகள். (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது). * * * முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com