ஊத்தங்கரை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்த விவசாயி தற்கொலை

ஊத்தங்கரை அருகே மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது55). விவசாயி. இவர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் பல்வேறு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட பார்த்திபன் கடந்த 5-ந்தேதி அன்று வெப்பாளப்பட்டியில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக பார்த்திபன் உயிரிழந்தார்.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com