இந்தியாவுடனான உறவு வரலாற்று சிறப்புமிக்கது- பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பெருமிதம்

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரான் குடியரசுத்தலைவர் மாளிகையில் பேசுகையில், இரு நாடுகளுக்கிடையேயான உறவு வரலாற்று சிறப்புமிக்கது என கூறினார். #EmmanuelMacron #MacroninIndia
இந்தியாவுடனான உறவு வரலாற்று சிறப்புமிக்கது- பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பெருமிதம்
Published on

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் மந்திரிகளுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். அவர்களை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

இதையடுத்து, இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய மெக்ரான், 'இந்தியாவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சென்ற ஆண்டு மோடி பிரான்ஸ் வந்த போது என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு துறை ஒத்துழைப்பில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். இருநாடுகளுக்கிடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவு வரலாற்று சிறப்புமிக்கது' என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com