நெல்லை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய ஊழியர் தற்கொலை

வேலை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கங்கை கொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் மின்வாரிய ஊழியர் தற்கொலை
Published on

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த மேட்டு பிராஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது54). இவர் மின்வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 5 மாதத்துக்கு முன்பு இவர் ஒரு விபத்தில் சிக்கினார். இதில் இவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது குணம் அடைந்தாலும் அவரால் மின்கம்பத்தில் ஏறி வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த அமிர்தராஜ், தற்கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று அவர் வீட்டில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அமிர்தராஜ் பலியானார்.

இது குறித்து கங்கை கொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com