பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் கைது

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் கைது
Published on

கோவை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோவையில் இன்று 4-வது நாளாக தி.மு.க.வினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை பாடை கட்டி வந்து முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

போராட்டத்துக்கு கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமை தாங்கினார்.

இதில் கார்த்திக் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி, நிர்வாகிகள் பிரபாரகன், சின்னசாமி, குமாரநாதன், மணிகண்டன், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் இன்று மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் சாலை மறியல் செய்தனர். இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கோட்டைஅப்பாஸ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் திருமலை ராஜா, கேபிள் மணிகண்டன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெம்பாபு, பொருளாளர் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எலியை வாயில் கடித்தப்படியும், சங்கு ஊதியும், பிளாஸ்டிக் எலும்புகளை மாலையாக அணிந்தபடியும் நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மறியல் செய்த 100-க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் வட்ட செயலாளர் அப்துல்ரகீம், புருசோத்தமன், உசேன், மதன், குமார், ராஜ், மணி, இலியாஸ், அப்பாஸ், மயில்சாமி,செந்தில்குமார் மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த இப்ராகிம், சிக்கந்தர், ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா லோகு தலைமையில் தி.மு.க.வினர் கணபதியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும் பாய், தலையணையுடன் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர். இதில் கணபதி பகுதி செயலாளர் லோகு, வட்ட செயலாளர்கள் பாண்டி, பன்னீர்செல்வம், பி.வி. சுப்பிரமணி, ஆனந்தகுமார், ராஜகோபால், செல்வமணி, முருகன், பழனியப்பன், மணல் மகேஷ், சிவகுமார், ரமேஷ்குமார், அருண், குமரேசன், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com