போதையில் வாலிபர் அடித்து கொலை திறந்தவெளி பார்களால் அதிகரிக்கும் வன்முறை பொதுமக்கள் பீதி

திண்டுக்கல் - பழனி ரோடு லாரிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கி இரவு நேரங்களில் லாரிப்பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து ஏராளமானோர் மது குடித்து வருகின்றனர்.குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் - பழனி ரோடு லாரிப்பேட்டை அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மது வாங்கி இரவு நேரங்களில் லாரிப்பேட்டை, ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அமர்ந்து ஏராளமானோர் மது குடித்து வருகின்றனர்.

நேற்று இரவு அவர்க ளுக்குள் ஏற்பட்ட தகராறில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உருட்டு க்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், நகர் மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை கைப்பற்றி திண்டு க்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரிய வில்லை. கொலையாளி களும் தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்த ப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொலையாளிகள் யார்? என்பது குறித்தும் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்தும் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு கொலை சம்பவம் நடந்த நிலையில் இது வரை அவர் யார்? என்பது கண்டுபிடிக்க முடியவில்லை.

திண்டுக்கல் நகரில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி பார்கள் செய ல்பட்டு வருகின்றன. அதே போல்தான் லாரிப்பேட்டை பகுதியிலும் இரவு 11 மணி வரை கும்பல் கும்பலாக அமர்ந்து மது குடித்து வருவது தினசரி சம்பவமாக நடந்து வருகிறது.

இது போன்ற சம்பவங்க ளால் போதையில் தகராறு ஏற்பட்டு அவர்களுக்குள் ேமாதிக் கொள்வதும் கொலையில் முடிவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏர்போர்ட் நகரில் திறந்தவெளியில் மது குடித்த புதுமாப்பிள்ளை படுகொலை செய்ய ப்பட்டார்.

அனுமந்தராயன்–்கோட்டையிலும், சுடுகாட்டில் மது குடித்தவர் படுகொலை செய்ய ப்பட்டார். திண்டுக்கல் பாரதிபுரம் மின் மயானம் பகுதியில் இரவு நேரங்களில் குடிமகன்கள் கும்மாளமிட்டு வரும் நிலையில் அடிக்கடி அங்கு கொலை சம்பவங்க ளும் நடந்து வருகிறது. எனவே திறந்தவெளி பார்களை போலீசார் கண்காணித்து அங்கு இரவு நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடை அருகே பல்வேறு இடங்களில் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையை கடக்கும் பொதுமக்களும் பீதியடைந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com