தென்காசியில் தேசிய நூலக வார விழாவில் யோகா போட்டி

நூலக வார விழாவில் யோகா போட்டி இரு பிரிகளாக நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில் ஒரு மாணவர் யோகா செய்து காட்டியபோது எடுத்தபடம்.
போட்டியில் ஒரு மாணவர் யோகா செய்து காட்டியபோது எடுத்தபடம்.
Published on

தென்காசி:

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் நூலக வார விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் யோகா போட்டி ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிகளாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் தென்காசி வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

ஏற்பாடுகளை த.மு.எ.க.ச. மாவட்ட செய லாளர் பக்ருதீன் அலி அகமது, போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆறுமுகம்,யோகா பயிற்சியாளர் அரவிந்த் யோகாலயா, மருது சுபாஷ், வட்டார நூலகர் பிரம்ம நாயகம், கிளைநூலகர் சுந்தர், நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதிஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தைஜேசு, முருகேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com