கூடலூர் அருகே பெண் தற்கொலை

சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்தவர் அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கூடலூர்:

கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டிைய சேர்ந்தவர் நாகராஜ் மனைவி செல்வி(48). இவர்கள் 2 பேரும் அதேபகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தங்கி வேலை செய்து வந்தனர். செல்விக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதால் மாத்திரை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

சம்பவத்தன்று வலி அதிகமானதால் விரக்தி அடைந்த செல்வி அரளிவிதையை அரைத்துகுடித்து மயங்கினார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com