தீக்குளிக்க முயன்ற தந்தை-மகன் மீது வழக்கு

தீக்குளிக்க முயன்ற தந்தை-மகன் மீது வழக்குப்பதியப்பட்டது. புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார்.
தீக்குளிக்க முயன்ற தந்தை-மகன் மீது வழக்கு
Published on: 

விருதுநகர்

திருச்சுழி தாலுகா பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் தெய்வசிகாமணி. நரிக்குடி-திருப்புவனம் மாநில ெநடுஞ்சாலையை ஆக்கிரமித்து இவர்கள் வீடு, கடை கட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் வீடு, கடையை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதன்படி மதுரை ெநடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சங்கர் தலைமையில் ஊழியர்கள் கட்டிடத்தை இடிக்க வந்தனர். அப்போது தந்தையும்-மகனும் பெட்ரோலை தங்கள் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அங்கிருந்த ேபாலீசார் உடனடியாக தடுத்து அவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் ஊழியர்கள் வீடு, கடையை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இந்த நிலையில் அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து மாரியப்பன், தெய்வசிகாமணி தீக்குளிக்க முயன்றது தொடர்பாக ஏ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புதுக்குளம் கிராம நிர்வாக அதிகாரி சரவணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com