கல்வராயன் மலை கிராமங்களில் காசநோய் கண்டறிதல் முகாம்

கல்வராயன் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காசநோய் முகாம் நடந்தது.காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காசநோய் கண்டறியும் முகாமில் பங்கேற்ற காசநோய் குழுவினர்.
காசநோய் கண்டறியும் முகாமில் பங்கேற்ற காசநோய் குழுவினர்.
Published on

வாழப்பாடி:

கல்வராயன் மலை கருமந்துறையை அடுத்த சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சூலாங்குறிச்சி, கோவில்புதூர், ஒடுவன்காடு, தாழ்வள்ளம், கலக்கம்பாடி கிராமங்களில் மருத்துவர் அலுவலர் ராஜா தலைமையில் காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர் சியாமலா, ஆஷா மற்றும் குழுவினர், வீடு வீடாக சென்று காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களை பரிசோதித்து காசநோய் அறிகுறிகளை கண்டறிந்து, உரிய சிகிச்சைகள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com