

திருச்சி:
திருச்சி ராக்சிட்டி சகோதயா சார்பாக 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டி கடந்த மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் திருச்சி காஜா நகர் சமது மேல்நிலைப்பள்ளியில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் மாநில அளவில 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சமது பள்ளியின் கபடி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டாக்டர். ஏ.கே.காஜா நஜிமுதீன் தலைமை தாங்கினார். சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டாக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம், பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டாக்டர். சி.ஜெ.சாக்கேர், காவேரி குளோபல் பள்ளியின் முதல்வர் எம்.சரஸ்வதி, பள்ளியின் துணை முதல்வர் ஜெ.மும்தாஜ் பேகம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகிேயார் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.