காங்கேயத்தில் குடி போதையில் கார், பஸ்சை நிறுத்தி அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு

45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது.
குடிபோதையில் பெண் அரசு பஸ்சை நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்ட காட்சி.
குடிபோதையில் பெண் அரசு பஸ்சை நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்ட காட்சி.
Published on

காங்கேயம் :

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில், கார், பஸ்சை நிறுத்தி போதையில் அட்டகாசம் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயத்தில், திருப்பூர் செல்லும் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க பெண், குடிபோதையில் வாகனங்களை மறித்து ரகளை செய்வதாக காங்கேயம் போலீசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். போலீசாரிடம் திமிறிய போதை பெண், அங்கு வந்த காரை நிறுத்தி, சாவியை பறித்தார். அவ்வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி கலாட்டாவில் ஈடுபட்டார். காங்கேயம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார், அந்த பெண்ணை சமாதானம் செய்து, லாவகமாக ஆட்டோவில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அந்த பெண் திருப்பூரை சேர்ந்த மகேஸ்வரி என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுவுக்கு அடிமையானதும் தெரிந்தது. அந்த பெண்ணை போலீசார் எச்சரித்து உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com