நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்

திருப்பூர் சரக விற்பனையாளர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். முழு உடல் பரிசோதனை மற்றும் எக்கோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
விற்பனையாளர்களுக்கு உடற்பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.
விற்பனையாளர்களுக்கு உடற்பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறை, ரோட்டரி திருப்பூர் காந்திநகர் சங்கம், ரேவதி மெடிக்கல் சென்டர் - அறக்கட்டளை, லோட்டஸ் கண் மருத்துவமனை , பி.ஆர்.எஸ். பல் ஆஸ்பத்திரி சார்பில் திருப்பூர் சரக நியாயவிலைக்கடை விற்பனையாளர்களுக்கு உடற்பரிசோதனை மருத்துவ முகாம் திருப்பூர் காந்திநகர் ரோட்டரி சங்கத்தில் நடைபெற்றது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் முகாமினை துவக்கி வைத்தார். திருப்பூர் சரக விற்பனையாளர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் எக்கோ உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முகாமில் கொரோனா தடுப்பூசி ,பூஸ்டர் ஊசிகள் விற்பனையாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

துணைப்பதிவாளர்கள் பழனிசாமி,முருகேசன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மற்றும் ரேட்டரி சங்கத்தலைவர் நித்தியானந்தம், செயலாளர் வெங்கடேஸ், ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com