இடுவாய் ஊராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை

ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், விஷ்ணு தொடர்ந்து உதவி செய்து வருவதை சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து பேசினார்.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்ட காட்சி.
பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர்:

இடுவாய் ஊராட்சியின் முன்னாள் தலைவரான மறைந்த பழனிச்சாமி கவுண்டர்- தாயம்மாள் தம்பதியினரின் பேரனும், அவிநாசி ராஜலட்சுமி கலர் ரூபிங் கம்பெனியின் உரிமையாளரும், ஊராட்சிக்கு தொடர்ந்து உதவிசெய்து வருபவருமான விஷ்ணு  தனது  சொந்த செலவில்இடுவாய் ஊராட்சி பாரதிபுரத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை பயிலும் ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், தாய் மற்றும் தந்தையை இழந்த ஏழை எளிய மாணவ மாணவிகள் என  66 பேருக்கு  இரண்டு செட் வண்ண சீருடைகளை பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று வழங்கினார்.

அவருக்குதலைமையாசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் சால்வை அணிவித்து வரவேற்றார்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், விஷ்ணு தொடர்ந்து உதவி செய்து வருவதை  சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து பேசினார்.

நிகழ்ச்சியில் சுப்பையன் கோ உரிமையாளர் பால் குட்டி, பள்ளி ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.ரூ. 60 ஆயிரத்திற்கும் அதிகமான மதிப்புள்ள வண்ண சீருடைகளை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள்  விஷ்ணுவுக்கு நன்றி தெரிவித்தனர்.  அப்போது விஷ்ணு பள்ளிக்கு கலையரங்கம் கட்ட உதவி செய்வதாக  உறுதி அளித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com