சர்வதேச தாய்மொழி தின நிகழ்ச்சி

கல்லூரி முகப்பில், ‘தமிழ்’ என்ற எழுத்து வடிவில் மாணவர்கள் அமர்ந்து தங்களின் மொழிப்பற்றை வெளிப்படுத்தினர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on: 

அவிநாசி:

அவிநாசி அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் ஆங்கிலத்துறை சார்பில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நளதம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கம்ப்யூட்டர் துறை தலைவர் ஹேமலதா முன்னிலை வகித்தார். 

கல்லூரி முகப்பில், ‘தமிழ்’ என்ற எழுத்து வடிவில் மாணவர்கள் அமர்ந்து தங்களின் மொழிப்பற்றை வெளிப்படுத்தினர். பிறகு நடந்த கலை இலக்கிய போட்டிகளில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மொழித்துறை பேராசிரியர்கள் சூரிய பிரபா, புனிதா, நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, தமிழ்த்துறை தலைவர் மணிவண்ணன், ஆங்கிலத்துறை தலைவர் தாரணி ஒருங்கிணைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com