காங்கயத்தில் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

காங்கயம்:

காங்கயத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் 11 வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

2020ம் நிதி ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை செலுத்தும்படி காங்கயம் நகராட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைத் தொடா்ந்து, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத காங்கயம் சத்யா நகா், தொட்டியபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 11 குடியிருப்புகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-

காங்கயம் நகராட்சிப் பகுதி பொதுமக்கள் நிலுவையில் உள்ள குடிநீா்க் கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என்றாா்

X

Maalai Malar
www.maalaimalar.com