தாவரவியல் பூங்காவில் கல்லூரி மாணவிகள் களப்பணி

கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் தாவரவியல் பூங்காவில் களப்பணி மேற்கொண்டனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி, சங்கோதிபாளையம் கிராமத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகம், இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மகிழ் வனம் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் பூங்கா உருவாக்கியுள்ளனர்.

சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், மூலிகைச்செடிகள், குழந்தைகள் விளையாட்டு பூங்கா, நடைபயிற்சி தளம், போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் தாவரவியல் பூங்காவில் களப்பணி மேற்கொண்டனர். 

இந்த நிகழ்ச்சிக்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பூங்கா நிர்வாகிகள், சண்முகம் சந்திரசேகர், பூபதி, சோமு பாலசுப்ரமணியம், கல்லூரி பேராசிரியர்கள் கிருபா தேவி, ஹரிணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com