திருப்பூரில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

திருப்பூர்:

காவல்துறையில் மேற்கு மண்டல அளவில் 48 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகர வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த தெய்வமணி கோவை மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த செந்தில்பிரபு திருப்பூர் மாநகருக்கும், திண்டுக்கல்லில் இருந்த ராஜசேகர் திருப்பூர் மாநகருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த உதயகுமார் திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சிவகாமி–ராணி திருப்பூர் மாநகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த திருப்பாச்சேத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த கவிதா திருப்பூர் மாநகருக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த காமராஜ் கோவை சரகத்துக்கும், மண்டல காத்திருப்போர் பட்டியலில் திருப்பூரில் இருந்த முரளிதரன் கோவை சரகத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் பிறப்பித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com