புத்துக்கோவிலில் அன்னதான திட்டம்

தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நாட்டறம்பள்ளி அருகே புத்துக்கோயில் ஆலயத்தில் அன்னதானம் திட்டத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
நாட்டறம்பள்ளி அருகே புத்துக்கோயில் ஆலயத்தில் அன்னதானம் திட்டத்தை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே பெத்தக்கல்லுப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்துக்கோயில் பகுதியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் அன்னதான திட்டத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து அன்னதானம் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார். முன்னதாக புத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

இவ்விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com