களக்காடு கோவிலில் தெப்பத்திருவிழா கால் நாட்டும் வைபவம்

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா கால் நாட்டும் வைபவம் இன்று நடந்தது.
கால் நாட்டும் வைபவம்  நடந்த போது எடுத்த படம்.
கால் நாட்டும் வைபவம் நடந்த போது எடுத்த படம்.
Published on

களக்காடு:

களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவில் தெப்ப திருவிழா வருகிற 11-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

முதல் நாளான 11-ந் தேதி மாலை சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்மன் தெப்ப உற்சவமும், 2-ம் நாளான 12-ந் தேதி மாலை வரதராஜபெருமாள் கோவில் தெப்ப உற்சவமும், 3-ம் நாளான 13-ந் தேதி சந்தான கோபால கிருஷ்ணசுவாமி கோவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

இதற்கான திருக்கால் நாட்டும் வைபவம் இன்று நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து திருக்கால் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது,

விழா நடைபெறும் தெப்பக்குளத்தின் அருகில் மேளதாளங்கள் முழங்க திருக்கால் நாட்டப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தெப்பத்திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குள பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com