

நெல்லை:
தமிழகம் முழுவதும் அரசு விடுதியில் தங்கி படிக்க பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு அடிப்படையில் தகுதிச்சுற்று போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதி போட்டிகள் நடந்தது. இந்நிலையில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் பாளை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இன்று 2-வது நாளாக நடந்த போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று கைப்பந்து போட்டியில் விளையாடிய மாணவர்களின் தனித்திறன் உள்ளிட்டவைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதன்விபரம் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் காலியாக உள்ள விடுதியின் இடங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். நாளை 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதி போட்டிகள் நடைபெறுகிறது.