எல்லைநாயக்கன்பட்டியில் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை எந்திரங்கள்

ஸ்ரீவைகுண்டம் அருகே எல்லைநாயக்கன்பட்டியில் உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்ட காட்சி.
உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை எந்திரங்கள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

செய்துங்கநல்லூர்:

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் எல்லைநாயக்கன்பட்டி கிராமத்தில் செயல்பட்டும் வரும் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு கூட்டுப்பண்ணையம் திட்டம் 2021-22-ன் கீழ் பண்ணை எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது.

 வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் வரவேற்றார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் முன்னிலை வகித்து தலைமையுரை ஆற்றினார். கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் தலைமை தாங்கி எல்லைநாயக்கன்பட்டி உற்பத்தியாளர் குழுவிற்கு பண்ணை எந்திரங்களை வழங்கினார்.

வேளாண்மை துணை இயக்குனர் உழவர் பயிற்சி நிலையம் ஜெய செல்வின் இன்பராஜ் கூட்டுபண்ணைய திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பண்ணை எந்திரங்களின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் காயத்ரி வேளாண்மைத் துறையின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் மகாராஜன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தெய்வச்செயல்புரம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் திருவேணி மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் செய் திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com