பழனியில் திருமாவளவன் சாமி தரிசனம்

சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.
பழனியில் திருமாவளவன் சாமி தரிசனம்
Published on: 

பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிகாலையில் வந்தார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டதுடன் தேவஸ்தான ஊழியர்கள் பிரசாதங்களை வழங்கினர். அதனைத் தொடர்ந்து போகர் சன்னதி, புலிப்பானி ஆசிரமம் ஆகியவற்றுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்பு தனியார் விசேஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது உதவியாளருடன் சென்று விட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com