கொள்ளிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆண் பிணம் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on: 

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. 

பொதுமக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்&இன்ஸ்-பெக்டர்கள் முருகேசன், ராஜ்கமல், சிறப்பு சப்&இன்ஸ்-பெக்டர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com