தென்னை மர வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கம்

மதுக்கூரில் வேளாண் கல்லூரி மாணவிகள் தென்னை மர வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கம் அளித்தனர்.
தென்னை மர வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கம்
தென்னை மர வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை பற்றி விளக்கம்
Published on

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் அருகே உள்ள வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் மதுமதி, பனிமலர், பாலஸ்ரீ வைஷ்மா, மோனிஷி, நர்மதா, நிவேதா, நந்தினி, கவிதா, ஜோதிர்மை லாவண்யா ஆகியோர் கடந்த சில நாட்களாக விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி உளுந்து இரு மடங்காக பெருக்குவது எப்படி ?, உளுந்து மற்றும் நிலக்கடலை விதை நேர்த்தி செய்யும் முறை என பல்வேறு முறைகளை பற்றிய செயல் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தென்னையில் காணப்படும் காண்டாமிருக வண்டின் அறிகுறிகளையும் அதற்கான இனக்கவர்ச்சி முறைகள் பற்றியும், தென்னையில் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் முறை, தென்னையில் மரநாய் ஏறும் போது அதனை கட்டுப்படுத்தும் முறைபற்றியும் மதுக்கூர் அண்டமி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து வயலில் செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தனர்.

தென்னையில் வெலிமடையில் அந்துருண்டை புல்மோட்டையில் வேப்பங்கொட்டை தூள் மற்றும் குருணை மருந்தை வைத்தல், இனக்கவர்ச்சிப் பொறி பயன்படுத்துதல், தென்னங்கன்று சுற்றி வலை அமைப்பது ஆகியவற்றை செயல்முறை விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com