கடையம் அருகே பண்ணை எந்திரங்கள் வழங்கும் விழா

கடையம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாப்பான்குளம், வெள்ளிகுளம் கிராமத்தில் பண்ணை எந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பண்ணை எந்திரங்களை யூனியன் சேர்மன் செல்லம்மாள் வழங்கிய காட்சி.
விழாவில் பண்ணை எந்திரங்களை யூனியன் சேர்மன் செல்லம்மாள் வழங்கிய காட்சி.
Published on

கடையம்:

கடையம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாப்பான்குளம், வெள்ளி குளம் கிராமத்தில் பண்ணை எந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உதவி இயக்குநர் ஏஞ்சலின் பொன் ராணி தலைமை தாங்கினார்.

துணை வேளாண்மை அதிகாரி சண்முக சுந்தரம் வரவேற்று பேசினார்.

விழாவில் யூனியன் சேர்மன் செல்லம்மாள், பாப்பான்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத்தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் பண்ணை எந்திரங்களான நெல் நடவு எந்திரம், பவர் டில்லர், ரோட்டோ வீட்டர் ஆகியவற்றை குழுவிற்கு வழங்கினர்.

 விழாவில் வேளாண்மை அதிகாரி அபிராமி, வேளாண்மை உதவி அதிகாரிகள் கமல்ராஜன், பேச்சியப்பன், உழவர் உற்பத்தியாளர் குழு மாடசாமி, பொருளாளர் அகத்தீஸ்வரி, செயலாளர் முருகன் மற்றும் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாப்பான்குளம் வேளாண்மை உதவி அதிகாரி தீபா செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com