டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி அஸ்திக்கு திருப்பூரில் அஞ்சலி

தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி அஸ்திக்கு திருப்பூரில் அஞ்சலி
Published on

திருப்பூர்:

வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை தொடங்கினார்கள்.

பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா இடையே ஷம்பு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுப்கரன்சிங் (வயது 21) என்ற விவசாயி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரின் அஸ்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு விவசாயிகள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த விவசாயியின் அஸ்தி, திருப்பூர் கொண்டு வரப்பட்டது.

பஞ்சாப்பை சேர்ந்த ரவீந்தர்சிங் தரப்பினர் கொண்டு வந்தனர். திருப்பூர் குமரன் நினைவிடத்தில் அஸ்தியை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திருப்பூரை சேர்ந்த விவசாய அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com