குற்றால அருவிகளில் 'திடீர்' வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.
மெயின்அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப்பயணிகள்.
மெயின்அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலாப்பயணிகள்.
Published on

தென்காசி:

தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் அவ்வப்போது மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

குறிப்பாக நேற்று நள்ளிரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி,பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று அதிகாலை முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் திடீர் தடை விதித்தது. சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பலர் குற்றால அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

இருப்பினும் தடை உத்தரவால் இன்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் அருவிகளை தூரத்திலிருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும் பள்ளிகளுக்கு தற்பொழுது தொடர் விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதாலும் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com