திருத்தணி அருகே பள்ளி மேற்கூரை சரிந்து சிறுவன் படுகாயம்

திருத்தணி அருகே அங்கன்வாடியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் சிறுவன் படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்தான்.
சிறுவன் விமல்ராஜ்
சிறுவன் விமல்ராஜ்
Published on

திருத்தணி:

திருத்தணி அடுத்த பூனிமாங்காடு கிராமத்தில் வசிக்கும் மூர்த்திராஜேஷ்வரி தம்பதியரின் மகன் விமல்ராஜ்(5). இவர் பூனி மாங்காடு பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு சென்றுள்ளார். இப்பள்ளியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

மதியம் 12 மணியளவில் அங்கன்வாடியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் விமல்ராஜ் படுகாயம் அடைந்து மயக்கம் அடைந்தான். உணவு இடைவேளை என்பதால் மற்ற குழந்தைகள் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளனர். சிறுவன் விமல்ராஜ் மட்டும் பள்ளியின் உள்ளே இருந்துள்ளான்.

படுகாயமடைந்த விமல்ராஜனுக்கு அருகில் உள்ள பூனிமாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com