பாளை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீர் மரணம்

பாளை ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரணம்
மரணம்
Published on

நெல்லை:

குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள பிராயன் மலை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 77).

இவர் இரணியல் அருகே நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்றார். இதைத்தொடர்ந்து அவரை பாளை ஜெயிலில் அடைத்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஜெயிலில் இருந்த அய்யப்பனுக்கு பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு அவர் இறந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com