எழும்பூர், பிராட்வே-திருவல்லிக்கேணி பகுதிகளில் நாளை குடிநீர் நிறுத்தம்

மேம்பாலம் கட்டுமான பணி: எழும்பூர், பிராட்வே-திருவல்லிக்கேணி பகுதிகளில் நாளை குடிநீர் நிறுத்தம் தேவையான தண்ணீரை சேமித்து வையுங்கள்
குடிநீர் நிறுத்தம்
குடிநீர் நிறுத்தம்
Published on

சென்னை, மார்ச்.27-

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட் சிக்குட்பட்ட கண்ணப்பர் திடல்-சால்ட்கொட்டாரம் - யானைகவுனி பகுதியில், புதிய மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற உள்ளது. இதற்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 700 மி.மீ., விட்டம் உடைய பிரதான குடிநீர் குழாய் இடம் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது.

எனவே நாளை(திங்கட் கிழமை) காலை 10.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை, வேப்பேரி, பெரியமேடு, பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப் பேட்டை, எழும்பூர், பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

அதேபோல், உயர் நீதிமன்றம், வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை, கொண்டி தோப்பு, சவுகார்பேட்டை, ஏழுகிணறு, ஜார்ஜ்டவுன், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

பொதுமக்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு, ராயபுரம் மண்டல பகுதி மக்கள் 81449 30905 மற்றும் தேனாம்பேட்டை மண்டல மக்கள் 81449 30909 என்ற எண்களை தொடர்பு கொள் ளலாம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com